Connect with us

Cricket

தல தோனிக்கு வந்த ‘பேட்’ பிரச்சனை: அந்த மனுசன நிம்மதியா இருக்க விடுங்கய்யா!!

இத்தனை ஆண்டு காலம் இந்தியாவின் கிரிக்கெட் ஆசைகளை சுமந்து நிறைவேற்றி வைத்த தல தோனிக்கு மீண்டும் மீண்டும் பிரச்சனைகள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எஸ்டேட் நிறுவனம் அமரபள்ளிக்கு விளம்பர தூதராக நடித்ததற்காக ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அது தீர்ந்து முடிப்பதற்குள் தற்போது அவர் பயன்படுத்தி வரும் ஸ்பார்ட்டன் (SAPRTAN) பேட் நிறுவனம் தொடர்பாக ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தோனி மற்றும் ஜலந்தர் நகரைச் சேர்ந்த குனால்ஷர்மா என்ற ஒரு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பிஸ்னஸ்மேன் ஆகிய இருவரும் ஸ்பார்ட்டன் பேட் கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தமான கருவிகளை தயாரித்து விற்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இதில் தல தோனிக்கு ஒரு பங்கு உண்டு.

தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஸ்பார்ட்டன் நிறுவனம் ஸ்பான்சர் செய்த பேட்களை வைத்து விளையாடி வருகின்றனர்.  மேலும் பல முன்னணி வீரர்கள் இந்த கம்பெனியின் பேட்டை பயன்படுத்தி விளையாடுவதால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்கும் வண்ணம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது

இந்நிலையில் பல முன்னணி வீரர்களுக்கு இந்த ஒப்பந்த பணம் பல மாதங்களாக சென்று சேறவில்லை என்ற ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. தற்போது கிறிஸ் கெய்ல், ஆரோன் பின்ச், ஆன்ட்ரு ரஸ்ஸல், இயான் மார்கன் மற்றும் இங்கிலாந்தில் 20க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ஒப்பந்த பணம் இன்னும் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்சனை தோனியின் காது வரை சென்றுள்ளது. இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் என்பதால் ஆசிய கோப்பை தொடருக்கு முன் அவருக்கு ஒரு தீர்க்க வேண்டிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See