Connect with us

Cricket

திணறும் இந்திய பவுலர்கள்; வலுவான நிலையில் இங்கிலாந்து!!

மூன்றாம் நாள் ஆட்டம் முடிவில் 250 ரன்கள் இந்திய அணியை விட அதிகம் எடுத்து 357/6 என்று வலுவான நிலையில் உள்ளது இங்கிலாந்து அணி.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்றது இங்கிலாந்து அணி. அதனை தொடர்ந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

முதலாம் நாள் ஆட்டம் முழுதும் மழையால் பாதித்தது. இரண்டாவது நாளும் சற்று மழையால் பாதிக்கபட்டாலும் விரைவில் துவங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து துவக்கத்தில் விக்கெட்டுகள் இழந்தது. ஆனால் அதை சரி செய்து பார்ஸ்டோவ் மற்றும் வோக்ஸ் இருவரும் சிறப்பாக ஆடி அணிக்கு வலு சேர்த்தனர்.

பார்ஸ்டோவ் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 357/6 எடுத்திருந்தது. வோக்ஸ் மற்றும் சாம் கர்ரன் இருவரும் களத்தில் இருந்தனர். வோக்ஸ்   அதிகபட்சமாக 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See