Connect with us

Cricket

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் – வெற்றியை நோக்கி வீறுநடை போடுகிறது இலங்கை

தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் துவக்கம் முதலே இலங்கை அணி தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் இரண்டாம் நாளில் தனது முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்பிரிக்க அணி 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

பின்னர் ஆடிய இலங்கை அணி 278 ரன்கள் அடித்து, தென் ஆப்பிரிக்கா அணிக்கு இமாலய இலக்காக 490 ரன்கள் அடிக்க பணித்தது. தற்போது 490 ரன்களை துரத்தி ஆடிவரும் தென்ஆப்பிரிக்கா அணி 138 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இன்னும் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார் இலங்கை அணி வெற்றி பெறும் இன்றைய ஆட்ட நேரம் இன்னும் சில நிமிடத்தில் முடிந்துவிடும் இதனால் நாளை நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னரே இலங்கை அணி டெஸ்ட் போட்டியை வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது.

டீன் எல்கர்- 37 ரன்கள்

ஐடின் மார்கரம் – 14 ரன்கள்

தியூனிஸ் டி ப்ரைன்* -43 ரன்கள்

ஹாஷிம் அம்லா – 6 ரன்கள்

பாஃப் டூ பிளெசிஸ் – 7 ரன்கள்

கேசவ் மகாராஜ் – 1 ரன்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See