Connect with us

Cricket

தொடஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பின்னர் கோலியின் பேச்சில் இருந்த மந்திர வார்த்தைகள்!!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இந்திய அணி போராடி தோற்றது.

இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

நாங்கள் 1-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளோம். இது மோசம் இல்லை. பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் இங்கிலாந்து அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது.

லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற டெஸ்ட்களில் நாங்கள் மோசமாக தோற்கவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் நன்றாக விளையாடின. இதனால் கடும் போட்டி இருந்தது.

இந்தியா- இங்கிலாந்து இடையேயான இந்த தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சிறந்த விளம்பரம் ஆகும். இரு அணிகளும் வெற்றிக்காக விளையாடியதால் ரசிகர்கள் மைதானத்துக்கு திரண்டு வந்தார்கள்.

இங்கிலாந்து அணி தொழில் ரீதியாக பயமில்லாமல் ஆடியது. இரண்டு அல்லது 3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட முடியும் என்பதை உணர்ந்து இருந்தனர். அவர்கள் (டிரா’ செய்ய வேண்டும் என்ற வகையில் ஆடவில்லை.

இந்த தொடர் மூலம் நாங்கள் நிறைய வி‌ஷயங்களை அறிந்தோம். இந்த தொடரில் இங்கிலாந்து அணியில் சாம்குர்ரான் சிறப்பாக செயல்பட்டார். ஓய்வு பெற்ற அலஸ்டர்குக் இங்கிலாந்தில் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See