Connect with us

Cricket

தொடரை இழந்தாலும் விராட் கோஹ்லி தான் டாப் !!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., இன்று வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில், மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரை இழந்துள்ளது.

இந்திய அணி தொடரை இழந்தாலும், இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்த ஒரே தொடரில் பல்வேறு சாதனைகளை தன் வசமாக்கி வருகிறார்.

இந்நிலையில் ஐ.சி.சி., வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலிலும் விராட் கோஹ்லி முதலிடத்தில் நீடித்துள்ளார். இதுவரை 8 இன்னிங்ஸ்களிலும் விராட கோலி 544 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.

அதே போல் இங்கிலாந்து வீரர்களில் சாம் கரன், மொயின் அலி ஆகியோர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சாம்கரன் 29 இடங்கள் முன்னேறி, 43-வது இடத்துக்கு வந்துள்ளார்.

மொயின் அலி 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், 3 இடங்கள் நகர்ந்து 33-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 4-வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 66 புள்ளிகள் பெற்று 543 புள்ளிகளுடன் 33-வது இடத்தை மொயின் அலி அடைந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See