Connect with us

Football

தொடர்ந்து மூன்றாவது முறை கோல் அடிக்க முடியாமல் போன ரொனால்டோ; ரசிகர்கள் ஏமாற்றம்!!

இத்தாலி நாட்டின் கால்பந்து லீக் தொடரான சிரி ஏ தற்போது 3வது வாரத்தை எட்டியுள்ளது. 3வது வாரத்திற்க்கான போட்டி ஒன்றில் பர்மா கால்சியோ மற்றும் ஜுவென்டஸ் இரு அணிகளும் மோதின.

இதில் போட்டி துவங்கிய 2வது நிமிடத்திலேயே ஜுவென்டஸ் வீரர் மரியோ மாண்ட்ஸுக்கிச் ஒரு கோல் அடித்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார். அதை தொடர்ந்து 33வது நிமிடத்தில் பர்மா நட்சத்திர வீரர் கர்வின்ஹோ கோல் அடித்து சமன் செய்தார்.

முதல் பாதி, 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியின் 58வது நிமிடத்தில் பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர நடுகள வீரர் ப்ளாய்ஸ் மட்டுயிடி கோல் அடித்து முன்னிலை படுத்தினார். இறுதியில் ஜுவென்டஸ் அணி 2-1 என போட்டியை வென்றது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரொனால்டோ, இறுதிவரை கோல் அடிக்காமல் ரசிகர்களை தொடர்ந்து 3வது முறையாக ஏமாற்றினார். கலந்துகொண்ட 3 லீக் போட்டிகளிலும் அவர் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

தற்போது புள்ளி பட்டியலில் 9 புள்ளிகளுடன் ஜுவென்டஸ் அணி முதலிடம் வகிக்கிறது.

அடுத்த போட்டியிலாவது ரொனால்டோ கோல் அடிக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See