Connect with us

Cricket

தோனியின் சாதனையை அசால்டாக காலி செய்தார் கோஹ்லி !!

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய கேப்டன் கோஹ்லி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரனாகியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

முதல் இரண்டு டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வென்றால் தான் இந்திய அணி தொடரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் நட்டிங்ஹாமில் நடக்கும் டெஸ்டில் களமிறங்கியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் இங்கிலாந்து அணி 161 ரன்கள் எடுத்தன.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து 292 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது. இதையடுத்து மூன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் கோலி (103) சதம் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் தோனி, அசாருதின் உள்ளிட்ட பல கேப்டன்களின் சாதனைகளை தகர்த்தார் கோலி.

இங்கிலாந்து மண்ணில் இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்த கேப்டன்கள்

ஆலம் பார்டர்
கிரேம் ஸ்மித்
விராட் கோலி 

டெஸ்டில் அதிக சதம் அடித்த இந்திய வீர்ர்கள்

சச்சின் – 51
டிராவிட் – 36
கவாஸ்கர் – 34
சேவக்/ கோலி -23
அசாருதின் – 22

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See