Connect with us

Cricket

தோனியை வச்சு இனி ஒன்னும் பண்ண முடியாது… ஒப்பனாக பேசும் பிசிசிஐ

டி.20 அணியில் இருந்து தோனி நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை பி.சி.சி.ஐ., அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இது குறித்து பி.சி.சி.ஐ.,யின் உயர் அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “2020ம் ஆண்டு நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டே தோனி டி,20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்திய தேர்வுக்குழுவின் இந்த துணிச்சலான முடிவில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. 2020ம் ஆண்டு டி.20 உலகக்கோப்பை வரை தோனி கிரிக்கெட் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை, அதனால் டி.20 அணியில் அவரை வைத்து கொண்டு பயணிப்பது தேவையற்றது, அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தின் காரணத்தினாலே இந்திய தேர்வுக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். அதே போல் தேர்வுக்குழு கூட்டத்தில் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் பங்கேற்றனர் அதனால் அவர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தோனி நீக்கப்பட்டிருக்க மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See