Connect with us

Cricket

தோனி ஒரு போர்க்குதிரை; அவரது ஓய்வு இப்போதில்லை – ரவி சாஸ்திரி!

தோனி ஒருநாள் போட்டிகளிருந்து இப்போது ஓய்வு பெறப் போவதில்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி முடிந்தவுடன் தோனி நடுவர்களிடமிருந்து பந்தை வாங்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் ஒரு போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றால் அப்போட்டியில் பயன்படுத்திய பந்தை வாங்கிச் செல்வது வழக்கம். அதே போல் தோனி ஆட்டம் முடிந்தவுடன் நடுவர்களிடமிருந்து பந்தை வாங்கி சென்றதால், அவர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை எழுந்தது.

தற்போது இந்த சர்ச்சைக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி “பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் காண்பிப்பதற்காகவே அந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பந்தை தோனி வாங்கிவந்தார். இதன் மூலம் ஆடுகளத்தின் தன்மை எப்படி உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்” என்று சாஸ்திரி விளக்கம் அளித்தார்.

மேலும் தோனியின் ஓய்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு “இது முட்டாள் தனமானது. தோனி இப்போது எங்கும் போகப்போவதில்லை. அவர் ஒரு போர்க்குதிரை. அவர் அணியில் இருப்பது நம் அணிக்கு பெரும் பலம்” என்றும் சாஸ்திரி தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See