Connect with us

Cricket

தோல்விக்கு காரணம் இதுதான்: விராட் கோலி ஆதங்கம்

தோல்விக்கு காரணம் இதுதான்: விராட் கோலி ஆதங்கம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியதாவது நன்றாக பந்து வீசினோம் ஆனால் 35வது ஓருக்குப் பின்னர் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதாரணமாக சென்றுவிட்டது. 260 ரன்கள் மட்டுமே கொடுக்க வேண்டிய இடத்தில் நாங்கள் 20 ரன்கள் அதிகமாக கொடுத்துவிட்டோம். 260 ரன்கள் மட்டுமே இந்த ஆடுகளத்தில் எடுக்க முடியும். மேலும் எங்களால் பார்ட்னர்ஷிப் சரியாக கொண்டு செல்ல முடியவில்லை. பீல்டிங் நன்றாக செய்தோம். வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஒரு அணி எந்த நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு பெரிய அணியையும் வீழ்த்தக் கூடிய திறமை உள்ள அணியாகும்.

மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் இருந்தால் நமக்கு ஒரு அதிகமான ஆப்ஷன் கிடைக்கும். பாண்டியா போன்று ஒரு வீரர் ஆட முடியாதபோது அணியில் சமாளிக்க முடியாத ஒரு நிலைமை ஏற்படுகிறது. மேலும் நாம் செய்ததையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கும் போது நமக்கு சற்று சங்கடமாக உள்ளது. சாமியுல்ஸ் பந்தை அடித்து ஆட எ நினைத்தேன் ஆனால் விக்கெட் இழந்து விட்டேன். வெற்றியோ தோல்வியோ அடுத்ததை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அடுத்த முறை நன்றாக ஆடுவோம் என நினைக்கிறேன் என்று கூறினார் அவர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See