Connect with us

Cricket

தோல்வி அடைந்தும் தவறை ஒப்புக்கொள்ளாமல் பேசும் ரவி சாஸ்திரி- என்ன பேசினார் தெரியுமா?

வெளிநாட்டு தொடர்களில் மீண்டும் மீண்டும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது இந்திய அணி. இதற்கு காரணம் இந்திய அணியின் பேட்டிங் என்று ஓரளவிற்குச் சொல்லலாம். ஆனால் அணியின் பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகம் எடுக்கும் வீரர்கள் தேர்வு முடிவிலும் பெரிய தவறு இருக்கிறது என்று நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 க்கு 1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. அடுத்த போட்டி இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

அவர் பேசுகையில் நாம் தவறு செய்துவிட்டோம் என்று ஒப்பனாக ஒப்புக்கொள்ளாமல் செய்த தவறை நியாயப்படுத்தியவாறு பேசியுள்ளார். மேலும் தற்போது உள்ள அணியை பழையை அணியுடன் ஒப்பிட்டு சிறந்த அணி என்று பேசியுள்ளார் அவர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

 

நாம் 3-1 என்ற கணக்கில் தோற்றுவிட்டோம். பொதுவாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும். ஆனால் 3-1 என்ற கணக்கில் வெற்றியும் பெற்று இருக்கலாம் ஏனெனில் அனைத்து போட்டிகளிலுமே கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். எனது அணிக்கு இது தெரியும். அவர்களுக்கு இது சற்று வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் கொடுக்கும்.

நாம் தொடர்ந்து வெளிநாடுகளில் நன்றாக செயல்பட்டு வருகிறோம். கடந்த 3 வருடங்களில் 9 தொடர்கள் வென்றுள்ளோம். அவற்றில் மூன்று வெளிநாடுகளில் வென்ற தொடர்கள் ஆகும். கடந்த 20 வருடங்களில் இது போன்ற ஒரு அணியை நாம்  உருவாகவில்லை. இதுதான் சிறந்த அணி.

என்று கூறினார் ரவி சாஸ்திரி.

ரவிசாஸ்திரி கூறும் இந்த தகவல்கள்  இந்திய அணியை சிறந்தது என்று கூறுவது இல்லை. ஏனெனில் அவர் கூறும் மூன்று வெளிநாட்டு வெற்றிகள் சொற்ப அணிகளுக்கு எதிராக வென்றதாகும்.

அதில் இரண்டு வெற்றிகள் மோசமான பார்மில் இலங்கை அணிக்கு எதிராகவும் ஒரு வெற்றி கும்ளே பயிற்சியாளராக இருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வந்த வெற்றிகளாகும். ஆனால் இவரது தலைமையில் வந்ததைப்போல ரவிசாஸ்திரி பேசிக் கொள்கிறார்.

இந்திய அணி தோற்றாலும் என்ன தவறு செய்தோம் என்று ஒப்புக் கொள்ளாமல். இது சிறந்த அணி, நாம் தவறு செய்யவில்லை என்று தொடர்ந்து அவர் கூறிவருவது ரசிகர்களையும் விமர்சகர்களையும் வேதனைப் படுத்தி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See