Connect with us

Cricket

நட்சத்திர கிரிக்கெட் வீரர் மீது 10 வருட தடை !!

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜம்செத் மீது 10 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஐபிஎல் போல பாகிஸ்தானில், பிசிஎல் எனும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது.

கடந்த வருடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற போட்டியில் சூதாட்ட புகார், பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதில் பல வீரர்கள் சிக்கினர். அதில் ஒருவரான நசீர் ஜாம்ஷெட் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சூதாட்ட புகார் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.,, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து விசாரணை நடத்தியது.

விசாரணையின் முடிவில் ஜம்செட் மீதான் குற்றம் நிரூபணமானதால் அவர் மீது 10 வருட தடை விதித்து ஐ.சி.சி., உத்தரவிட்டுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See