Connect with us

Cricket

‘நல்ல வேல அந்த பையன் கடைசி டெஸ்ட்ல டீமுக்குள்ள வந்தது எங்களுக்கு நல்லதா போச்சு’ : இந்திய வீரரை புகழும் இங்கிலாந்து பயிற்சியாளர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  இந்திய பேட்ஸ்மேன்கள் ஒருபுறம் திணறி வந்தாலும், ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக ஆடி இந்திய அணியைவ் கரை சேர்த்தார்.

தனி ஆளாக நின்று போராடி இந்திய அணிக்கு பெரும் தூணாக விளங்கினார். இதுகுறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பால் பர்பிராஸ் கூறியதாவது…

நல்ல வேளையாக கடைசி டெஸ்ட் போட்டியில் தான் ஜடேஜா அணிக்கு உள்ளே வந்தார். முன்னர் நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருந்தால் இது நடந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அவர் தற்போது நான் அணிக்குள் வந்துள்ளார். இது எங்களுக்கு நல்லதாகப் போய்விட்டது.

அவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர் பேட்டிங் பந்துவீச்சு பீல்டிங் என அனைத்திலும் அசத்தக்கூடியவர். அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடியது எங்களுக்கு லாபம் ஆகிவிட்டது என்று ரவீந்திர ஜடேஜாவை பாராட்டினார் இங்கிலாந்து பயிற்சியாளர்.

ஓவல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று 174 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்று தொடங்கிய இந்திய அணி ஜடேஜா, விஹாரியின் அபாரமான அரைசதங்களையடுத்து முதல் இன்னிங்சில் 292 ரன்கள் எடுத்துள்ளது.

இதன் மூலம் இங்கிலாந்தின் முன்னிலையை 40 ரன்களாகக் குறைத்தனர். மொயின் அலி வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் ஜடேஜா ஒரு சிங்கிள் எடுத்து அடுத்த ஓவரின் ஸ்ட்ரைக்கைத் தக்க வைக்கலாம் என்று முயற்சி செய்தார், ஆனால் பும்ராவினால் ரீச் செய்ய முடியவில்லை, பிராட் த்ரோவை பேர்ஸ்டோ சுலபமாக பிடித்து ரன் அவுட் செய்தார். பும்ரா ரன்னே எடுக்காவிட்டாலும் ஜடேஜா 32 ரன்கள் சேர்க்க உறுதுணையாக 14 பந்துகள் நின்றார்.

ரவீந்திர ஜடேஜா 156 பந்துகளில் 11 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 86 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார், சதம் எடுக்கும் வாய்ப்பு அவருக்கு இருந்தது, ஆனால் பும்ரா ரன் அவுட்டினால் அது பறிபோனது.

இந்த டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளையும் 86 முக்கிய ரன்களையும் எடுத்து ஹர்திக் பாண்டியாவின் இடத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளார் ஜடேஜா.வ்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See