Connect with us

Football

நாங்கள் கோவாவை போல் சிறப்பாக விளையாடவில்லை – சென்னை பயிற்சியாளர் ஜான் க்ரெகோரி வருத்தம்

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்)-இன் எட்டாவது போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னையின் எஃப்சி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் 1-3 கோல் கணக்கில் எஃப்சி கோவா அணியிடம் தோல்வியை தழுவியது. ஆட்டத்தின் முதல் பாதியில் எடு பெடியா மற்றும் இரண்டாவது பாதியில் கொரோமினஸ், மௌர்டாடா ஃபால் கோல் அடித்து கோவா அணியை வெற்றிபெற உதவினர். மேலும் சென்னையின் அணிக்கு ஆறுதலாக எலி சபியா ஒரு கோல் அடித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தோல்வியை குறித்து சென்னையின் எஃப்சி-யின் தலைமைபயிற்சியாளர் ஜான் க்ரெகோரி கூறியதாவது

“நிறைய நேரம் நாங்கள் பொறுப்பாக விளையாடவில்லை நல்ல டிஃபென்சிவ் வீரர்கள் இருந்தும், டிஃபென்சிவாக நாங்கள் நிறைய தவறு செய்தோம்; மூன்று கோலையும்  தடுத்திருக்கலாம் ஆனால் நாங்கள் அனைத்து வாய்ப்பையும் தவறியே வந்தோம். இரண்டாவது பாதியை விட, முதல் பாதியில் வீரர்கள் சற்று சிறப்பாக விளையாடினர்; 1-0 கோலிலேயே நன்கு தடுத்தும் வந்தனர்.”

மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில்

“நான் ஏற்கனவே சொன்னது போல் கோவா அணி ஐஎஸ்எல் தொடரில் ஒரு சிறந்த அணியே. தற்போது அவர்கள் மீண்டும் அதை நிருபித்துள்ளனர். நாங்கள் அடுத்த முறை சிறப்பாக விளையாடி கோவா அணியை வீழ்த்துவோம் என நம்புகிறேன். தற்போதும் எங்களுடைய ஒரே நோக்கம் முதல் நான்கில் முடித்து ப்லே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே.”

சென்னையின் எஃப்சி அடுத்து நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி  எதிர்கொள்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See