Connect with us

Cricket

நான் இந்த இந்திய பந்து வீச்சாளரின் மிகப்பெரிய ரசிகன்: டேல் ஸ்டெய்ன் பெருமிதம்

உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன். இவர் கடந்த சில ஆண்டுகளாக காயம் காரணமாக அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வருகிறார். ஆனால், 2019 உலகக்கோப்பை தொடரில் வெல்வதே என் லட்சியம் என்று கூறி கடுமையாக உழைத்து வருகிறார்.

இவர் தான் யாருடைய ரசிகர் என்று கூறியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் மிகப்பெரிய ரசிகர் என்று கூறியுள்ளார் அவ்ர். இஷாந்த் சர்மாவிற்கு கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

நான் இஷாந்த் சர்மாவின் ரசிகனாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறேன். ஏனெனில் சுழற்பந்து வீச்சுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இந்திய அணியில், இந்திய ஆடுகளங்களில் அவர் வேகப்பந்து வீச்சாளராக ஜொலித்து வருகிறார். ஒவ்வொரு முறையும் அந்த அணிக்காக நன்றாக ஆடுகிறார். சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இந்திய ஆடுகளங்களில் கூட நன்றாக ஆடி உள்ளார்.  இதனால் நான் அவரது ரசிகனாக பல ஆண்டுகலாக இருக்கிறேன் என்று கூறினார் ஸ்டெய்ன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See