Connect with us

Cricket

நான் கபில் தேவ் இல்லீங்க… ஹர்திக் பாண்டியா தான்.. – ஹர்பஜன், ஹோல்டிங் முகத்தில் கரியை பூசிய ஹர்திக்

5 விக்கெட் வீழ்த்தி தன்னை விமர்சித்த மைக்கல் ஹோல்டிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாண்டியா.

இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 6 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். டெஸ்ட் போட்டியில் அவர் 5 விக்கெட்கள் சாய்ப்பது இதுவே முதல் முறை. இதையடுத்து இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

விமர்சகர்களுக்காக நான் விளையாடவில்லை. நான் நாட்டுக்காக விளையாடுகிறேன். விமர்சகர்கள் எதையாவது பேசுவதற்கு சம்பளம் வாங்குகிறார்கள். வாங்கும் சம்பளத்துக்கு எதையாவது பேசுவார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. அது எனக்கு தெரியவும் வேண்டாம்.

கபில்தேவுடன் ஒப்பிடுவது பற்றி கேட்கிறார்கள். எல்லாம் சரியாக இருந்தால் யாருடனாவது ஒப்பிடுகிறார்கள். ஏதாவது தவறாகிவிட்டால், ’அவர் போல் இல்லை, இவர் போல் இல்லை’ என்று பேசத் தொடங்கி விடுகிறார்கள். நான் அவருடன் என்னை ஒப்பிட்டதில்லை. நான் கபில்தேவ் ஆக, ஆசைப்பட்டதுமில்லை. நான் ஹர்திக் பாண்ட்யாவாக இருக்கிறேன்.

அப்படியே இருந்துவிட்டு போகிறேன். அப்படித்தான் இந்திய அணிக்கு வந்தேன். 40 ஒரு நாள் போட்டிகளிலும் 10 டெஸ்ட் போட்டிகளிலும் ஹர்திக் பாண்ட்யாவாகத்தான் விளையாடி இருக்கிறேன். அவர் காலத்தில் கபில்தேவ் சிறந்த வீரர். என்னை யாருடனும் ஒப்பிட வேண்டாம். அப்படி ஒப்பிடாமல் இருந்தால் அதுவே மகிழ்ச்சி’ என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See