Connect with us

Cricket

நான் சிறப்பாக பந்து வீச இவர்தான் காரணம்: இளம் வீரர் கலீல் நெகிழ்ச்சி!

வெஸ்ட் இந்திய அணியில் ராஜஸ்தானை சேர்ந்த வேகப்பந்துவீச்சா ளர் கலீல் அகமது இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே, புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கலீல் அகமதுவுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கடும் என்று தெரிகிறது.

இந்நிலையில் கலீல் அகமது செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானேன். அது முதல் தொடர் என்பதால் எனக்கு பதட்டம் இருந்தது. அழுத்தம் இருந்தது. இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டேன். இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். நான் நன்றாக பந்துவீசுவதற்கு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கானும் காரணம். டெல்லி டேர்டெ வில் ஸ் அணியில் இருந்தபோது அவரோடு அதிக நேரம் செலவிடுவேன். அவர் கொடுத்த ஆலோசனைகளைப் பயன்படுத்தி பந்துவீசுவேன்.

வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்படி பந்துவீசுவது என்பதை அவர்தான் கற்றுக்கொடுத்தார். அதன் காரணமாகத்தான் சிறப்பான பந்துவீச்சாளராக உருவெடுத்திருக்கிறேன். தேசிய அணியில் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு இல்லை. எல்லோரும் சமமாகத்தான் பார்க்கிறார்கள். எல்லோரி டமும் பேசுவது போலவே என்னிடமும் பேசுகிறார்கள். என் நம்பிக்கையை அதிகரிக்க வைக்கிறார்கள். வருகிற ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தினால், எனது நம்பிக்கை அதிகரிக்கும். உலகக் கோப்பை தொடரில் எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த நம்பிக்கை என் மீதான அழுத்தத்தைக் குறைக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See