Connect with us

Cricket

நாளைய ஒருநாள் போட்டிகான அணி இன்றே அறிவிப்பு: புதிய விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பு! என்ன செய்வார் தோனி??

கவுகாத்தியில் நாளை நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி இன்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விக்கெட்ட கீப்பராக இல்லாமல், வீரராக ரிஷப் பந்த் ஒருநாள் போட்டித் தொடரில் அறிமுகமாகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, பின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற பந்த் இப்போது ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. அசாம் மாநிலம், கவுகாத்தியில் நாளை முதலாவது ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் விளையாடும் 12 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ளது.

இதற்கு முன் டாஸ் குறித்த அறிவிப்பு வெளியான பின்புதான் இறுதியாக 12 வீரர்கள் குறித்த பட்டியல் வெளியாகி வந்தநிலையில், டெஸ்ட் தொடரில் இருந்து ஒருநாள் முன்பே வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவன் களமிறங்குவார்கள். அடுத்ததாக அம்பதி ராயுடு, விராட் கோலி, ரிஷப் பந்த், எம்.எஸ் தோனி ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதில் நடுவரிசையை பலப்படுத்தும் நோக்கில் தோனி, ரிஷப் பந்த் 5 அல்லது 6-வது வீரராகக் களமிறங்கக்கூடும்.

ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் சுழற்பந்துவீச்சிலும் ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சில் கலீல் அகமது, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதில் கடந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் இருந்து ரவிந்தீர ஜடேஜா சிறப்பாக பேட்செய்தும், பந்துவீசியும் வருவதால், அவர் அணிக்குள் மீண்டும் இடம் பிடித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்குப் பின் முகமது ஷமி ஒருநாள் அணிக்குள் வந்துள்ளார். ஆசியக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது உள்ளார்.

நாளை நடைபெறும் போட்டியில் 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவார்களா அல்லது 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவார்களா என்பதை இறுதி நேரத்தில்தான் தெரியும்.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, ரிஷாப் பந்த், அம்பதி ராயுடு, எம்.எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ரவிந்தீர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See