Connect with us

Cricket

நியுசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் அட்டவனை அறிவிப்பு!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் அடுத்த வருட துவக்கத்தில் ஜனவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10ஆம் தேதி முடிவடைகிறது.

அடுத்த வருடம் 2019 ஏப்ரல்-மே மாதங்களில் உலக கோப்பை தொடர் துவங்க உள்ளது.  உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி கடைசியாக விளையாடும் குறுகிய ஓவர் போட்டி தொடராக இது அமையும்.

மேலும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இங்கிலாந்தை போலவே தட்பவெப்பம் மற்றும் சூழ்நிலைகள் கொண்ட நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து தயாராக இந்த முடிவை எடுத்து அட்டவணையை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

ஒருநாள் போட்டிக்கான அட்டவனை

 

போட்டி இடம்  தேதி
முதல் ஒருநாள் மெக்லீன் பார்க், நேப்பியர் ஜன.23,7:30 AM
2வது ஒருநாள் பே ஓவல், மவுண்ட் மவுன்கனேய் ஜன.26,7:30 AM
3வது ஒருநாள் பே ஓவல், மவுண்ட் மவுன்கனேய் ஜன.28,7:30 AM
4வது ஒருநாள் செடன் பார்க், ஹாமில்டன் ஜன.31,7:30 AM
5வது ஒருநாள் வெஸ்ட்பாக் ஸ்டேடியம், வெலிங்டன் பிப்.03,7:30 AM

 

டி20 போட்டிக்கான அட்டவனை 
முதல் டி20 வெஸ்ட்பாக் ஸ்டேடியம், வெலிங்டன் பிப்.06, 12.30PM
2வது டி20 ஈடன் பார்க், ஆக்லாந்து பிப்.08, 11.30PM
3வது டி20 செடன் பார்க், ஹாமில்டன் பிப்.10, 12.30PM

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See