Connect with us

Football

நீண்ட கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட லிவர்பூல் கேப்டன் ஜோர்டன் ஹெண்டர்சன்!!

லிவர்பூல் அணிக்கு கேப்டனாக வலம் வந்த ஜோர்டன் ஹெண்டர்சன் சுமார் 7 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு 2011 ஆம் ஆண்டு முதல் அந்த அணிக்காக ஆடிவருகிறார்.

 

இந்நிலையில், அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கமால் இருந்தது லிவர்பூல் அணி நிர்வாகம். வரும் சீசனில் வேறு அணிக்கு ஆடுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால், சில வாரங்களாக ஹெண்டர்சன் ஏஜென்டிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, நேற்றைய தினம் மிக நீண்ட கால ஒப்பந்தத்தில் லிவர்பூல் அணியுடன் கையெழுத்திட்டார் ஹெண்டர்சன்.

 

இது குறித்து பேசிய ஹெண்டர்சன், முந்தைய ஒப்பந்தம் நேற்று தான் முடிந்தது போல உள்ளது, அதற்குள் அடுத்த ஒப்பந்தம் என என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்த க்ளப் தவிர வேறு எந்த அணியிலும் நான் ஆட நினைத்ததில்லை. உலகின் மிக சிறந்த இடம் இது. எனது இறுதி கால்பந்து வாழ்க்கை வரை இங்கு ஆட விரும்புகிறேன்” என மனம் திறந்து பேசினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See