Connect with us

Cricket

நீ நல்லா இருப்படா தம்பி; இந்திய வீரருக்கு நன்றி தெரிவித்த அலெஸ்டர் குக் !!

தவறான த்ரோ மூலம் தனக்கு மற்றொரு வாய்ப்பளித்த ஜஸ்ப்ரிட் பும்ராஹ்விற்கு அலெஸ்டர் குக் நன்றி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நான்கு டெஸ்டின் முடிவில் இங்கிலாந்து அணி 3-1 என தொடரை கைப்பற்றி சாதித்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நடக்கிறது. இப்போட்டி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குக் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியாகும்.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தனது கடைசி இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் குக் சதம் அடித்தார். இவர் 96 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய வீரர் பும்ராஹ் வீசிய ஓவர் துரோ, இவர் சுலபமாக சதம் எட்ட உதவியது. இதற்காக பும்ராவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என குக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அலெஸ்டர் குக் கூறியதாவது, ” இந்த நன்கு நாட்களும் ஒரு கனவு போல இருந்தது. 96 ரன்கள் இருந்த போது ஒருரன் எடுக்க ஓடிய போது, இன்னும் 3 ரன்கள் எடுத்துவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால் பும்ரா வீசிய பந்து பவுண்டரிக்கு சென்றதால் மிகச்சுலபமாக சதத்தை எட்டினேன். யோசித்துக்கொண்டிருந்தால், சதம் எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும். ஆனால், பும்ராவால் அந்த நெருக்கடி போய்விட்டது. இதற்காக அவருக்கு தான் நன்றி தெரிவிக்கணும்.’ என்றார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See