Connect with us

Badminton

பாட்மின்ட்டன் ஒற்றையர் பிரிவு: பதக்கங்களை உறுதி செய்த சாய்னா மற்றும் சிந்து

ஆசிய விளையாட்டு பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் செய்னா நேவல், சிந்து முன்னேறினர். இதன்மூலம் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் முறையாக பதக்கம் உறுதியாகி உள்ளது.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் பெண்களுக்கான பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 10வது இடத்திலுள்ள இந்தியாவின் செய்னா நேவல், தாய்லாந்தின் ரட்சனோக்கை (4வது இடம்) எதிர்கொண்டார். முதல் செட்டில் 3–8 என பின்தங்கியிருந்த செய்னா 21–18 என போராடி கைப்பற்றினார். அடுத்த செட்டில் அசத்திய இவர் 21–16 என தனதாக்கினார். மொத்தம் 42 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் செய்னா 21–18, 21–16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இவர், ரட்சனோக்கிற்கு எதிராக விளையாடிய கடைசி 5 போட்டியில், 4வது வெற்றியை பதிவு செய்தார். அரையிறுதியில் செய்னா, சீன தைபேயின் டிசுயிங்கை எதிர் கொள்கிறார்.

சிந்து அபாரம்

மற்றொரு காலிறுதியில் இந்திய வீராங்கனை சிந்து (நம்பர்–3) தாய்லாந்தின் ஜின்டோபோலை (11வது இடம்) சந்தித்தார். முதல் செட்டை 21–11 என கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 16–21 என பறிகொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சுதாரித்த இவர் 21–14 என தன்வசப்படுத்தினார். முடிவில், சிந்து 21–11, 16–21, 21–14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இதன்மூலம், பாட்மின்டனில் இம்முறை குறைந்தபட்சம் இரண்டு வெண்கலம் உறுதியானது. தவிர ஆசிய விளையாட்டில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் முறையாக பதக்கம் கிடைக்க உள்ளது. இதுவரை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சையது மோடி (1982, டில்லி) மட்டுமே வெண்கலம் வென்றிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See