Connect with us

Cricket

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் இந்திய கிரிக்கெட் வீரர் – யார் அந்த நட்சத்திர வீரர்?

இந்திய கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு ஓரம் கட்டப்பட்டவர் கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். ஐபிஎல் தொடரின்போது ஸ்பாட் பிக்சிங் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்றம் சென்று தான் குற்றமற்றவர் என்று நிரூபித்தார் ஸ்ரீசாந்த். இருந்தும் , அவரை ஆட விடாமல் தடுத்து வருகிறது பிசிசிஐ. இதற்காக அடுத்தடுத்து தனது முயற்சிகளை மேற்கொண்டு வரும் அவர் எப்படியாவது கிரிக்கெட் ஆடிய தீருவேன் என்ற நோக்கத்தில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது வித்தியாசமாக ஒரு முயற்சி செய்து வருகிறார். இப்போது நடைபெறும் ஹிந்தி பிக்பாஸ் தொடரின் 12வது சீசனில் இவர் பங்கு கொள்ள இருக்கிறார். இதனால் இவர் அந்த ஸ்பாட் பிக்சிங் மனநிலையில் இருந்து வெளி வந்து விட்டார் என்றும் தெரிகிறது.

இது போன்று ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இவருக்கு புதிதல்ல. இதற்கு முன்னர் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். மேலும் ஹிந்தி படங்கள் சிலவற்றில் சின்ன ரோல் செய்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See