Connect with us

Cricket

பிசிசிஐ தலைவர் மீது ‘மீ டூ’ சர்ச்சை!

பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி மீது மீ டூ மூலம் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 2016 முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய சிஇஓ பதவி வகித்து வருகிறார் ராகுல் ஜோரி.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது அவர் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீ டூ ஹேஷ்டாக் மூலம் பதிவிட்டுள்ளார்.ராகுல் ஜோரி மீது மீ டூ வில் வெளியான பாலியல் புகார் எதிரொலியாக விளக்கம் தருமாறு அவருக்கு பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் கடந்த 2001 முதல் 2016 வரை பல்வேறு நிலைகளில் ஜோரி பணிபுரிந்திருந்தார். அப்போது அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுத்தாளர் ஹர்னீத் கெüர் பாதிக்கப்பட்ட நபர் பெயரை குறிப்பிடாமல் சுட்டுரையில் பதிவிட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See