Connect with us

Football

பிபா உலக கால்பந்து தொடர்: ஜப்பான் அணி சாம்பியன்

‘பிபா’ 20 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து தொடரில் ஜப்பான் பெண்கள் அணி முதல் முறையாக கோப்பை வென்றது. பைனலில் 3–1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

பிரான்சில் பெண்களுக்கான ‘பிபா’ 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. வானிஸ் நகரில் நடந்த பைனலில் ஜப்பான், ஸ்பெயின் அணிகள் மோதின. துவக்கம் முதலே ஜப்பான் அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 38வது நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு ஹினாடா முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய ஜப்பான் அணிக்கு சயோரி (57வது நிமிடம்), நகானோ (65) கைகொடுத்தனர். ஸ்பெயின் சார்பில் கேன்டிலா (71) மட்டும் ஆறுதல் தந்தார். முடிவில், ஜப்பான் அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கோப்பை கைப்பற்றியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See