Connect with us

Football

பிபா சிறந்த வீரருக்கான விருது – 11 ஆண்டுகளில் முதல் முறையாக மெஸ்ஸி முதல் மூன்று இடங்களில் கூட வரவில்லை!!

ஒவ்வொரு வருடமும் சர்வதேச அணிக்காகவும், கிளப் அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்ட ஒருவரை தேர்வு செய்து பிபா கால்பந்து நிர்வாகம், அவருக்கு சிறந்த வீரருக்கான விருதினை தருவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டும், கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, அதே ரியல் மாட்ரிட் அணியை சேர்ந்த லூக்கா மோட்ரிச் மற்றும் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷாலா ஆகியோர் சிறந்த வீரருக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக முதல் மூன்று இடங்களில் கூட பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இடம்பெறவில்லை. இவர் 2017/18 சீசனில் 44 கோல்கள் அடித்துள்ளார். மேலும் கோப்பா டெல் ரே, லா லிகா போன்ற தொடர்களை வென்றும் தந்துள்ளார்.

லூக்கா மோட்ரிச் ரியல் மாட்ரிட் அணிக்காக சாம்பியன்ஸ் லீக் கோப்பையும், குரோசியா அணியை பிபா உலககோப்பையின் இறுதிபோட்டிக்கும் கொண்டு சென்றுள்ளார்.

அதேபோல, ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று தந்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மட்டுமே 15 கோல்கள் அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

லிவர்பூல் அணிக்காக தனது முதல் சீசனை ஆடிய ஷாலா, 43 கோல்கள் மற்றும் 12 முறை கோல்கள் அடிக்க உதவியும் செய்துள்ளார். இதனால் இம்முறை மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி முதல் மூன்று இடங்களில் இவர் இடம்பெற்றுள்ளார்.

5 முறை சிறந்த வீரர் பட்டம் வென்ற மெஸ்ஸி இம்முறை இடம்பெறாதது ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See