Connect with us

Cricket

பிராட்மேன், லாரா, பாண்டிங் வரிசையில் கிங் கோலி: சாதனை மேல் சாதனை

அடுத்தடுத்து சதங்களை விளாசி சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார். இந்திய கேப்டன் விராட் கோலி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இதனால் இந்திய அணி 405 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விராட் கோலியின் இந்த அபார சதத்தால் அவர் ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்து சாதனை புரிந்துள்ளார்.

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக முறை 200+ ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா ஆகியோரும் உள்ளனர். இது போன்ற ஜாம்பவான்கள் வரிசையில் தற்போது விராட் கோலியும் இணைந்து சாதனை படைத்துள்ளார்.

ஒரு டெஸ்ட் தொடரில் 200+ அடித்துள்ள வீரர்கள் பட்டியல்:-

  1. குமாரா சங்ககாரா (இலங்கை) – 17 முறை
  2. பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்)  – 15 முறை
  3. டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) – 14 முறை
  4. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) – 13 முறை
  5. *விராட் கோலி (இந்தியா) – 12 முறை
  6. யுனிஸ் கான் (பாகிஸ்தான்) – 11 முறை

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See