Connect with us

Badminton

பிவி சிந்து இறுதிச் போட்டி முடிவு: என்ன செய்தார் தெரியுமா?

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முதலாக பேட்மிண்டன் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை சிந்து இன்று காலை நடந்த இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வாங்கி கொடுத்துள்ளார் ஆனால் கடுமையாக போராடியது போராட்ட குணம் பாராட்டத்தக்கது. மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் மூன்று பதக்கங்களில் இரண்டு பதக்கம் இந்தியாவிற்குச் சென்று மாறியுள்ளது நேற்று சாய்னா நேவால் வெண்கலப்பதக்கம் வென்றார் இன்று பிவி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் ம

ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடி முன்னிலை பெற்றார் தாய். இதனால் முதல் செட்டில் 10-5 என முன்னிலை பெற்றார். டிராப் ஷாட்களில் சிந்துவைத் திணறடித்தார் தாய். இதனால் 15-10 எனத் தொடர்ந்து முன்னிலை பெற்றார். கடைசியில் 21-13 என முதல் செட்டை வென்றார் தாய். 2-வது செட்டில் தாய்-ன் ஆக்ரோஷத்துக்கு ஓரளவு ஈடு கொடுத்தார் சிந்து. இதனால் இருவரும் அடுத்தடுத்துப் புள்ளிகளைப் பெற்றார்கள். எனினும் ஆரம்பத்தில் தாய் 10-7 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய தாய், 2-வது செட்டை 21-16 என வென்று தங்கப் பதக்கத்தை வென்றார். 13-21, 16-21 என இறுதிச்சுற்றில் தோற்ற சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

2016 ரியோ ஒலிம்பிக்கில் இறுதியில் தோற்று வெள்ளி வென்றார் சிந்து. அதே போல் 2017, 2018 உலக சாம்பியன் போட்டியிலும், 2018 காமன்வெல்த் போட்டியிலும் இறுதியில் தோற்று வெள்ளி மட்டுமே வென்றார். ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டி, உலக சாம்பியன்ஷிப் என தொடர்ந்து முக்கியமான போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் தோல்வியடைந்த சிந்து தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிச்சுற்றிலும் தோல்வியடைந்து ரசிகர்களை மிகவும் ஏமாற்றியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See