Connect with us

Cricket

புதிய உலக சாதனை படைத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன் !!

இந்திய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸை 40 ரன்கள் முன்னிலையுடன் துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் மற்றும் அலெஸ்டர் குக் சதம் அடித்து கைகொடுத்தன் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு 464 ரன்கள் என்ற இமாலய ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியாக ஷிகர் தவான் 1 ரன்னிலும், அடுத்து வந்த புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

தவான் மற்றும் புஜாராவை அடுத்தடுத்து வெளியேற்றிய ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் வரிசையில் முன்னாள் ஜாம்பவான் மெக்ராத்தின் சாதனையை சமன் செய்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள்;

ஜேம்ஸ் ஆண்டர்சன் – 563 விக்கெட்டுகள்

கிளன் மெக்ராத் – 563 விக்கெட்டுகள்

வால்ஸ் – 519 விக்கெட்டுகள்

கபில் தேவ் – 434 விக்கெட்டுகள்

ஸ்டூவர்ட் பிராட் – 433 விக்கெட்டுகள்

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See