Connect with us

Badminton

பேஏட்மின்டன் பிரிமியர் லீக்: சிந்து, சாய்னாவின் விலை என்ன தெரியுமா?

பிஎல், ஐஎஸ்எல், பிகேஎல் போன்று பாட்மிண்டன் விளையாட்டையும் பிரபலப்படுத்த பிரீமியர் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது சீசன் 4-ஆம் போட்டிகள் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி மும்பையில் தொடங்கி, 2019 ஜனவரி 13-இல் பெங்களூரில் இறுதிச் சுற்றோடு முடிவடைகிறது.

ஏற்கெனவே 8 அணிகள் இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது 9-ஆவது அணியாக புணே செவன் ஏசெஸ் அணி சேர்க்கப்பட்டுள்ளது. இது நடிகை டாப்ஸிக்கு சொந்தமான அணியாகும். இந்நிலையில் வீரர், வீராங்கனைகளுக்கான ஏலம் புது தில்லியில் நடைபெற்றது.

பி.வி.சிந்து, உலக சாம்பியன் கரோலினா மரின் ஆகியோரை ஏலம் எடுக்க அதிக கவனம் செலுத்தினர்.  கடந்த முறை ஹைதராபாத் அணியில்விளையாடிய கரோலினாவை, புணேவும், சென்னை அணியில் விளையாடிய சிந்துவை தற்போது ஹைதாரபாத் அணியும், சாய்னா நெவாலை நார்த் ஈஸ்டன் வாரியர்ஸும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தொகையான ரூ.80 லட்சத்துக்கு ஏலம் எடுத்தன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See