Connect with us

Cricket

பொருத்தாடும் இந்தியா !! ஈடுகொடுக்கும் ஹாங்காங்!

ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா ஹாங் காங்கை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் சரியாக 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் சுண்ட, ஹாங் காங் அணி கேப்டன் அன்சூமான் ராத் ‘டெய்ல்’ என அழைத்தார். ‘டெய்ல்’ விழ ஹாங் காங் அணி கேப்டன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது.

16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 84 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது இந்தியாவின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 49 பந்துகளில் 45 நாட்களும் அம்பத்தி ராயுடு 25 பந்துகளில் 15 ரன்களும் எடுத்துள்ளார் இந்தியனின் தற்காலிக கேப்டன் ரோகித் சர்மா 22 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See