Connect with us

Cricket

பொறுப்பற்ற ஆட்டத்தால் தொடரை இழந்தது இந்தியா !!

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இங்கிலாந்து இரண்டு போட்டியில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்காம்டனில் நடைபெற்றது.

இதில் இந்திய அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வெறும் 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கோஹ்லி 58 ரன்களும், துணை கேப்டன் ரஹானே 51 ரன்கள் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 184 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 3-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See