Connect with us

Asian Games

போட்டியின் போதே ஹை-பி.பி: விடாமல் படகை செலுத்தி பதக்கம் வென்ற இந்திய வீரர்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று ஒரு உணர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்திய வீரர் தன் நாட்டிற்காக பதக்கம் வெல்ல தனது உடல் நிலையையும் பாராமல் போட்டி போட்டு தன்னை நிருபித்துள்ளார்.

குறைந்த எடை ஒற்றையர் படகுப்போட்டியில் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கலம் வென்றார். இந்த வெண்கலம் தங்கத்தை விட மதிப்பானது, ஏனெனில் ஹாங்காங் மற்றும் கொரியா ஆகிய வீரர்களை எதிர்த்து படுவேகமாக போட்டி போட்டுக்கொண்டு படகினை செலுத்தியபோது துஸ்யந்திற்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது.

அதனையும் அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படகைச் செலுத்திக் கடைசியாக எல்லையில் சென்று மயங்கி விழுந்தார் துஸ்யந்த். மயங்கி விழுந்த பின்னர் பார்த்தபோது துஸ்யந்த் 7 நிமிடம் 18 வினாடிகளில் எல்லையைக் கடந்து தனது தாய் நாட்டிற்காக வெண்கலம் வென்றார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See