Connect with us

Kabaddi

ப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ்!! அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா!

பாட்னாவில் நேற்றிரவு நடந்த 37-வது லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா -தபாங் டெல்லி அணிகள் மோதின. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்ததால் 3 நிமிடங்கள் இருக்கும் போது 35-35 என்ற புள்ளி கணக்கில் சமநிலை ஏற்பட்டது. அதன் பிறகு கடைசி நிமிடங்களில் அபாரமாக ஆடிய உ.பி.யோத்தா அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தியது. உ.பி. அணியில் ஸ்ரீகாந்த் ஜாதவ் 12 புள்ளிகளும், பொறுப்பு கேப்டன் பிரசாந்த் குமார் ராய் 11 புள்ளிகளும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். 7-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பதிவு செய்த 3-வது வெற்றி இதுவாகும்.

இதைத் தொடர்ந்து நடந்த இன்னொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 43-32 என்ற புள்ளி கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. பாட்னா கேப்டன் பர்தீப் நார்வால் ரைடு மூலம் 14 புள்ளிகள் சேர்த்த போதிலும் பலன் இல்லை. பாட்னாவுக்கு விழுந்த 4-வது அடி இதுவாகும்.வ

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See