Connect with us

Cricket

மணிக்கு 150 கிமி வேகத்தில் பந்து வீசும் இந்திய வீரர்: சீறிப்பாயும் மின்னல்வேக பந்துகள்!

ஜார்கண்ட அணி எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறது, மேட்ச் இல்லாத நாளில் நானும் சென்று பயிற்சி பெற்று வருகிறேன் என வருன் ஆரோன் கூறியுள்ளார். எம்.ஆர்.எஃப் எனக்கு 2வது தாயகமாகும், இப்போதும் மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசுகிறேன். இப்போது பல தினுசு பந்துகளையும் வீசுகிறேன், என்றார்.

2015-ல் பிரிஸ்பன் டெஸ்ட் உடன் இவர் 9 டெஸ்ட்களை இந்திய அணிக்காக ஆடியுள்ளார். பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் 2014-15 தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிகப்புப் பந்து தோலின் ருசியைக் காட்டினார், ஆனால் தோனியின் மோசமான களவியூகம், கற்பனைவளமற்ற கேப்டன்சியினாலும், கேட்ச்கள் விடப்பட்டதாலும் இவரது கரியர் கேலிக்கூத்தானது.

மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் வருண் ஆரோன் நீக்கப்பட்ட போது ஷேன் வார்னும் மார்க் டெய்லரும் உண்மையில் வருத்தம் கலந்த ஆச்சரியமடைந்தனர்.

லீஷயர் அணிக்கு ஆடிய அனுபவம் பற்றி வருண் ஆரோன் தற்போது கூறும்போது, “நான் இப்போது லெக் கட்டர் வீசுகிறேன். வேகம் குறைந்த பந்துகளை கொஞ்சம் நன்றாக வீசக் கற்றுக் கொண்டுள்ளேன், முன்பு அவுட் ஸ்விங் அதிகம் வீசுவேன் இப்போது இன்ஸ்விங்கரிலும் கவனம் செலுத்துகிறேன்.

இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து இல்லாவிட்டால் நான் கிரிக்கெட்டே ஆடிக்கொண்டிருக்க மாட்டேன்” என்றார் வருண் ஆரோன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See