Connect with us

Cricket

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினாரா தல தோனி…? வைரலாகும் புகைப்படம் !

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற போராட்டத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் கலந்து கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சமூக  வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில தினங்களாக விண்ணை முட்டும் அளவிற்கு உயா்ந்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என கூறி காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் நேற்று பந்த் அறிவித்தது, இதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு கொடுத்தன.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட  முழு அடைப்பு போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  மகேந்திர சிங் தோனி, அவரது மனைவி சாக்ஷி உள்ளிட்டோருடன் பெட்ரோல் நிலையத்தில் அமா்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த புகைப்படம் தவறானது எனவும், இது கடந்த சில தினங்களுக்கு முன்பு தோனி சிம்லா சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் ஆங்கில் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See