Connect with us

Other Games

மாற்றுதிறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: பதக்கங்களை குவிக்கும் இந்திய வீரர்கள்!

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 3வது ஆசிய பாரா விளையாட்டு நடக்கிறது. இதில் ஆண்களுக்கான ‘எப்42–44/61–64’ பிரிவு ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் சந்தீப் சவுத்தரி, சுமித், ராக்கதார் திப்பு சுவாமி ஆகியோர் பங்கேற்றார்.

மூன்றாவது வாய்ப்பில் சந்தீப் அதிகபட்சமாக 60.01 மீ., துாரம் எறிந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் இம்முறை தங்கம் வென்ற முதல் இந்தியரானார். மற்ற இந்திய வீரர்களான சுமித் (56.29 மீ.,), திப்பு சுவாமி (45.32 மீ.,) முறையே 5, 8வது இடங்களை பிடித்து ஏமாற்றினர்.

வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே இலங்கையின் சமிந்தா சம்பத் ஹெட்டி (59.32 மீ.,), ஈரானின் ஓமிடி அலி (58.98 மீ.,) கைப்பற்றினர்.

பெண்களுக்கான ‘எப்46’ பிரிவு ஈட்டி எறிதலில் இந்தியாவின் ரம்யா, அதிகபட்சமாக 31.51 மீ., துாரம் எறிந்து 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஜாதவ் தங்கம்: ஆண்களுக்கான 50 மீ., ‘பட்டர்பிளை’ எஸ்7(6–7) பிரிவு நீச்சல் போட்டி பைனலில் பந்தய துாரத்தை 32.71 வினாடியில் கடந்த இந்தியாவின் ஜாதவ் சுயாஷ் நாராயண் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

பெண்களுக்கான 100 மீ., ‘பட்டர்பிளை’ எஸ்10 பிரிவு நீச்சல் போட்டியில் பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 24.86 வினாடியில் கடந்து 2வது இடம் பிடித்த இந்தியாவின் சதிஜா தேவான்ஷி வெள்ளி வென்றார்.

ரக்சிதா அபாரம்: பெண்களுக்கான ‘டி11’ பிரிவு 1500 மீ., ஓட்டத்தில் பந்தய துாரத்தை 5 நிமிடம், 40.64 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த இந்தியாவின் ரக்சிதா ராஜு தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

பெண்களுக்கான ‘டி12/13’ பிரிவு 1500 மீ., ஓட்டத்தில் பந்தய துாரத்தை 5 நிமிடம், 17.65 வினாடியில் கடந்து 2வது இடம் பிடித்த இந்தியாவின் ராதா வெங்கடேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதுவரை இந்தியாவுக்கு 3 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என, மொத்தம் 16 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See