Connect with us

Other Games

மீண்டும் அசத்திய 16 வயது இந்திய சிங்கம்: உலக துப்பாக்கி சுடுதலில் பதக்கம்

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார். அதே பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் சீமா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். கொரிய வீரர் லிம் ஹாஜின் 243.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் சிங் சீமா 218 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கமும் வென்றனர். முன்னதாக நடந்த அணிகளுக்கான போட்டியில் சவுரப் சவுத்ரி, அர்ஜூன் சிங் சீமா, அன்மோல் ஜெயின் இணைந்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

16 வயது நிரம்பிய சவுரப் சவுத்ரி சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See