Connect with us

Other Games

மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பிய செரீனா வில்லியம்ஸ்!!

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் போட்டிகள் சில தினங்களுக்கு முன்பு துவங்கியது.  ஆடவர்கள் மற்றும் பெண்களுக்கான முதல் சுற்று போட்டிகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.

இதில் விம்பிள்டன் தொடரை வென்ற ஜோகோவிச் ஸ்டீவ் ஜான்சனை நேர் செட் கணக்கில் வென்று எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அதனை தொடர்ந்து ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் கிரேட் பிரிட்டனை சேர்ந்தவரான ஆண்டி முர்ரே அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பெண்களுக்கான முதல் சுற்றில் விம்பிள்டன் ரன்னர் அப் செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய வீராங்கனை டாரியாவை 6-1, 6-2 என முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See