Connect with us

Kabaddi

மீண்டெழுந்த சாம்பியன் பாட்னா பைரட்ஸ்: யுபி யொத்தாவிடம் திரில்லர் வெற்றி!

புரோ கபடி லீக் சீசன் 6-ஆவது போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் யுபி யோத்தாஸ் அணியை 43-41 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்றது நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ்.
புரோ கபடி லீக் போட்டியின் சென்னை பிரிவு போட்டிகள் வியாழக்கிழமையோடு நிறைவடையும் நிலையில் நேரு உள்விளையாட்டரங்கில் இரு அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக அமைந்தது. நடப்பு சாம்பியன் முதல் ஆட்டத்தில் தமிழ்த் தலைவாஸிடம் படுதோல்வி அடைந்திருந்தது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற பாட்னா அணி தீவிர கவனம் செலுத்தியது. அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான பார்தீப் நர்வால் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அணியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்கை வகித்த அவர் 16 புள்ளிகளை குவித்தார். முதல் பாதி நிறைவில் பாட்னா 25-21 என முன்னிலை பெற்றிருந்தது.
ஆட்டம் தொடங்கியதும், யுபி அணி ஆதிக்கம் செலுத்தினாலும், படிப்படியாக பாட்னா அணி வீரர்கள் தங்கள் கட்டுக்குள் ஆட்டத்தை கொண்டு வந்தனர்.
யுபி அணியின் ரைடர் ரிஷாங்க் தேவதிகா சிறப்பாக செயல்பட்டாலும், போதிய புள்ளிகள் குவிக்க முடியவில்லை.
ஆட்டம் முடிய 4 நிமிடங்கள் இருக்கும் போது யுபி அணியின் ஸ்ரீகாந்த் ஜாதவ் 41-41 என சமநிலையை ஏற்படுத்தினார். ஆனால் இறுதியில் யுபி ரைடர் ரிஷாங்க் நடுவர் அழைப்பதற்கு முன்பு மைதானத்தில் நுழைந்ததால் பாட்னாவுக்கு 2 டெக்னிக்கல் புள்ளிகள் தரப்பட்டன. இதன் மூலம் 43-41 என பாட்னா வென்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See