Connect with us

Cricket

முதல் போட்டியிலேயே கிரிக்கெட் கடவுளின் பாராட்டை பெற்ற ரிஷப் பண்ட் !!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவிற்கு  முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிகாம் டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னி்ங்சை தொடங்கியது.

இன்றைய 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து விக்கெட் இழக்கவில்லை. அதன்பின் ஹர்திப் பாண்டியாவின் மாயாஜால ஸ்விங் பந்தில் இங்கிலாந்து சரணடைந்தது. 6 ஓவர்கள் வீசிய ஹர்திக் பாண்டியா ஒரு மெய்டன் உடன் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

இதன்மூலம் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

அதேபோல் இந்த டெஸ்டில் அறிமுகமான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அபாரமாக செயல்பட்டார். பறந்தது பறந்தும், டைவ் அடித்தும் கேட்ச் பிடித்தார். அவர் ஐந்து கேட்ச் பிடித்து அசத்தினார்.

இதனால் அறிமுக போட்டியிலேயே ஐந்து கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.

விக்கெட்டிற்கு முன்னாடியும், விக்கெட்டிற்கு பின்னாடியும் அசத்திய ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்திற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See