Connect with us

Cricket

முன்னர் நடிகைக்கு பாலியல் தொல்லை… தற்போது வரதட்சனை கொடுமை – அடச்சே.. வங்கதேச வீரர்களுக்கு இதே வேலையா போச்சு

வங்கதேச வீரர்கள் தற்போது படிப்படியாக கிரிக்கெட்டில் முன்னேற்றமடைந்து வந்தாலும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் ஒழுக்கமின்மையால் பெரிதளவும் தங்களது நாட்டின் மானத்தை வாங்கி வருகின்றனர். வரதட்சணை கொடுமை, பாலியல் பலாத்காரம், நடிகைக்கு பாலியல் தொல்லை, போட்டியின்போது அநாகரிகமான செயல்களைச் செய்தல், என அடுத்தடுத்து தங்களது ஒழுங்கீனத்தை அரங்கேற்றி வருகின்றனர் இந்த வங்கதேச வீரர்கள்.

இந்நிலையில் தற்போது 22 வயதான வங்கதேச வீரர் மொசாடக் ஹொசைன் தனது மனைவியை வரதட்சனை கொடுமை படுத்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த செய்தி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. 22 வயதான அவர் கடந்த வருடம் சாயிரா சமீரா உஷா என்ற 19 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின் துவக்கத்தில் இருந்தே பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது தனது மனைவியிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு அவரை வீட்டைவிட்டு துரத்தி விட்டுள்ளார் அவர். இதுகுறித்து தற்போது வங்கதேச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு வங்கதேச பந்துவீச்சாளர் ரூபல் ஹுசைன் நடிகை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அவரை ஏமாற்றி உள்ளதாக செய்திகள் வந்தது. பின்னர் அவருக்கு 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அந்த நடிகையை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஏமாற்றியுள்ளார் இந்த வேகப்பந்துவீச்சாளர். இப்படியாக வங்கதேச வீரர்கள் பெரும்பாலும் பெண்கள் சம்பந்தமான விஷயத்தில் மிகவும் ஒழுங்கீனமாக நடந்து வருவது தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See