Connect with us

Cricket

ஆர்.சி.பியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்!

ஐபிஎல் தொடரில் கடந்த 10 வருடங்களாக சொதப்பி வரும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தற்போது பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எப்போதுமே ஒரு நல்ல அணியாக வரும் அந்த அணி பெரிதாக ஏதும் சாதிப்பதில்லை. இதனால் இதுபோன்ற பல முடிவுகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்ற வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது இந்த இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். மேலும், சென்ற வருடம் அதே அணிக்காக அவர் பந்துவீச்சு ஆலோசராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது, ஆர்சிபி அணி தனது பயிற்சியாளர் குழுவில் இன்னும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்த வருடமாவது ஐபிஎல் கோப்பையை தட்டுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See