Connect with us

Cricket

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம்? காரணம் என்ன?

இந்திய அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பிறகு இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய வீரர்கள் அனைவரும் மனதளவில் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

முதல் போட்டியில் கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பிற்கு சென்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் படுமோசமாக சொதப்பினார்.

அதுபோக பந்துவீச்சாளர்கள் முதல் போட்டியில் ஆடிய அளவிற்கு ஆடவில்லை. தற்போது இந்திய அணிக்கு வந்துள்ள மோசமான செய்தி என்னவென்றால் கேப்டன் விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவது குறித்து சந்தேகம் எழுந்தது.

ஏனெனில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் முதுகு தசை பிடிப்பின் காரணமாக அவர் காலத்திற்கு வந்து ஆடவில்லை அதன் காரணமாக ரகானே கேப்டன்ஷிப் செய்தார்.

தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் விராட் கோலியின் முதுகுப் பிடிப்பு சரியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது மேலும் அவர் இல்லாத பட்சத்தில் இந்திய அணியை வழி நடத்துவது யார்? என்ற கேள்வியும் பெரிதாக உருவாகியுள்ளது.

ஏனெனில் துணை கேப்டனாக ரகானே மிகவும் மோசமான பார்மில் உள்ளார் அவருக்கு பதிலாக புதிய கேப்டன் கூட நியமிக்கப் பட வாய்ப்புகள் உள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See