Connect with us

Cricket

‘மேட்ச் முடிச்சிட்டு வாங்க.. உங்களுக்கு வச்சிருக்கோம் ஆப்பு’: கோச் ரவி சாஸ்திரிக்கு பிசிசியை கிடுக்குப்பிடி

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி தொடரை பறிகொடுத்தது, சர்ச்சைக்குரிய விதத்தில் அணித்தேர்வு, வீரர்கள் காயத்தை மறைத்து விளையாடச் செய்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த பிசிசிஐ நிர்வாகக் கமிட்டி (சிஓஏ) தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியைக் குடையக் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துக்கு 2 மாதப் பயணமாக இந்திய அணி சென்றது. அந்நாட்டு அணியுடன் டி20 தொடரை மட்டும் வென்ற இந்திய அணி ஒரு நாள் தொடர், டெஸ்ட் தொடரை இழந்தது. இந்தத் தொடரில் வீரர்கள் குறித்த தேர்வு, ஒவ்வொரு போட்டியிலும் வீரர்களை மாற்றியது, காயத்துடன் வீரர்களை விளையாடச் செய்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


இவை குறித்தும், இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்தும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் கமிட்டி அறிக்கை கேட்கும் எனத் தெரிகிறது.

இதற்கு முன் இருந்த ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் கிரேக் சேப்பலுக்கு பின் வந்த எந்தப் பயிற்சியாளரும் ஒவ்வொரு தொடர் முடிந்தபின், ஒவ்வொரு வீரர்கள் குறித்தும், ஒட்டுமொத்த அணி குறித்தும் திறனாய்வு அறிக்கையை அளிக்கவில்லை. அணியின் மேலாளர் மட்டுமே அறிக்கை அளித்து வந்தார்.

அணியின் மேலாளர் பிசிசிஐ அமைப்பிடம் அளிக்கும் அறிக்கை என்பது, நிர்வாக ரீதியாக இருக்கும். அதாவது அணி வீரர்களுக்குத் தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், உணவு வகைகள், பயிற்சிச்சூழல், உள்ளிட்ட வசதிகள் குறித்து மட்டுமே அறிக்கை அளிப்பார்கள்.

இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பின் இப்போது பயிற்சியாளரிடம் அறிக்கையை நிர்வாகக் கமிட்டி கேட்கும் எனத் தெரிகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See