Connect with us

Cricket

மோசமான சாதனையை வேதனையுடன் பதிவு செய்த ரிஷப் பண்ட் !!

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து ஆடிய இந்திய அணி புஜாராவின் அபார சதத்தால் 273 ரன்கள் எடுத்தது. ரிஷப் அறிமுகமான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து ரன் கணக்கை தொடங்கினார். ஆனால் இந்த இன்னிங்ஸில் 29 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியலில் ரெய்னா மற்றும் இர்ஃபான் பதானுடன் இணைந்துள்ளார். 2005ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இர்ஃபான் பதானும் 2011ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ரெய்னாவும் 29 பந்துகளை சந்தித்து ரன் எடுக்காமல் அவுட்டாகினர். அதே 29 பந்துகளில் ரன் எடுக்காமல் அவுட்டாகி, இர்ஃபான் பதான், ரெய்னாவுடன் ரிஷப் பண்ட்டும் இணைந்துள்ளார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See