Connect with us

Football

ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் மோதும் போட்டிக்கான தேதி அறிவிப்பு!!!

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணிகளாக ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா இரு அணிகளும் மோதும் போட்டிக்கான தேதியை நேற்று  அறிவித்தது லா லிகா வாரியம்.

உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் போட்டியான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதும் போட்டியை அக்டோபர் மாதம் 28ம் தேதி நடைபெற உள்ளது என லா லிகா தலைவர் ஜாவியஸ் தேபாஸ் தெரிவித்தார்.

இவ்விரு அணிகளும மோதிக்கொள்ளும் போட்டிக்கு ஸ்பெயின் மொழியில் “எல் க்ளாஸ்சிகோ” என பெயரும் உண்டு.

போட்டி இம்முறை பார்சிலோனா அணியின் மைதானமான கேம்பநௌ இல் இந்திய நேரப்படி இரவு 11.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

இம்முறை மாட்ரிட் அணியில் ரொனால்டோ மற்றும் பார்சிலோனா அணியில் இனியஸ்ட்டா இருவரும் இல்லையென்றாலும் போட்டியின் பரபரப்பிற்கு பஞ்சமே இருக்காது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See