Connect with us

Cricket

லார்ட்சில் வைத்து இந்திய அணியை பொட்டலம் கட்டிய ஆண்டர்சன் – 107க்கு ஆல் அவுட்!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியில் இந்திய அணியை அடித்து துவைத்து 107 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து விட்டது இங்கிலாந்து அணி.

இதற்கு முக்கிய காரணம் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆவார் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் மழை காரணமாக அவ்வப்போது தடைபட்டுக்கொண்டிருந்தது.

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே முரளி விஜய் ஆண்டர்சனிடம் ஸ்டம்புகளை இழந்து தலை தொங்கிய படி வெளியேறினார். அதன் பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்கள் மிகவும் சொற்பமாக சொதப்ப இந்திய அணி 107 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

முக்கியமாக விராட் கோலி ஒரு தற்கொலை ரன் அவுட் ஒற்றை தூண்டி சட்டேஸ்வர் புஜாரா அவுட் ஆக்கினார். அதன் பின்னர் இந்திய அணி எளிதாக பொட்டலம் கட்டப்பட்டது.

இதுவரை இங்கிலாந்து சென்ற இந்திய அணி களிலேயே இந்த அணிதான் மிகவும் திறமை வாய்ந்த அற்புதமான அணி என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறிக் கொண்டிருந்த வேளையில் வெறும் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See