Connect with us

Cricket

லார்ட்ஸ் டெஸ்ட்; 396 ரன்கள் குவித்து டிக்ளெர் செய்தது இங்கிலாந்து !!

இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி 289 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளெர் செய்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் மழை காரணமாக விளையாடப்பட வில்லை. 2ம் நாளில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பாரிஸ்டோவ் 93 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 137* ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 7 விக்கெட்டுக்கு 396 ரன்கள் எடுத்த நிலையில் 289 ரன்கள் முன்னிலையுடன்  டிக்ளெர் செய்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See