Connect with us

Football

லா லிகா கால்பந்து: மெஸ்ஸியின் அபார ஆட்டத்தால் பார்சிலோனா முதல் வெற்றி!!

நேற்றைய தினம் ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகளான லா லிகா போட்டிகள் கோலாகலமாக துவங்கியது.

இதில் 3வது போட்டியாக பார்சிலோனா அணியும் டெபொடிவோ ஆல்வேஸ் அணியும் மோதின. துவக்கம் முதலே பார்சிலோனா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் பாதி 0-0 எனவே முடிந்தது.

ஆனால் இரண்டாவது பாதி பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. 64வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோஅல் அடித்து முன்னிலை படுத்தினார். அதனை தொடர்ந்து கவுடின்ஹோ 83வது நிமிடத்தில் சற்று கடினமான கோல் அடித்து 2-0 என மேலும் பலப்படுத்தினார்.

90+2 நிமிடத்தில் மெஸ்ஸி மீண்டும் ஒரு கோல் அடித்து 3-0 என பார்சிலோனா அணியை வெற்றி பெற செய்தார். இது அவர் கேப்டன் பொறுப்பேற்ற முதல் லீக் போட்டியாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See